kalvi tholaikatchi Video Class Starts

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

kalvi Tholaikatchi Video Class Starts  
கல்வி தொலைக்காட்சியில், பாடங்களை பதிவேற்றம் செய்வதற்கான வீடியோக்கள் எடுக்கும் பணி, உடுமலை கல்வி மாவட்டத்தில் துவங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், பள்ளிக்குச்செல்ல முடியாமல் இருப்பதால், புதிய கல்வியாண்டு துவங்கியும், குழந்தைகளுக்கு, பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால், கல்வி தொலைக்காட்சி மற்றும் சில 'டிவி' சேனல்கள் மூலமாக, ஆசிரியர்களின் வீடியோ பாடங்களை திரையிடுவதற்கு அரசு அறிவித்துள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கான பாடங்களும், வீடியோ மூலமாகவே நடத்துவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தது போல தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இல்லை என்றும் தொலைக்காட்சியின் வாயிலாக பாடங்கள் எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் அதன்படி. பாடப்பிரிவுகளை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட பாடங்களாக பிரித்து வழங்கியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம், உடுமலை கல்வி மாவட்டம் மற்றும் திருப்பூர் கல்வி மாவட்டத்தில், வீடியோ பதிவுகள் நடக்கிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், நான்காம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மற்றும் ஏழாம் வகுப்பு உயிரியல் பாடங்களுக்கும், 16 ஆசிரியர்களின் கற்பித்தல் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது.சமூக அறிவியல் பாடத்துக்கான வீடியோ பதிவு, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உயிரியல் பாடத்துக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் நடக்கிறது.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், பேராசிரியர்கள் விமலாதேவி, பிரபாகரன், சுகுணா, பாபிஇந்திரா உள்ளிட்டோர் குழுவாக, வீடியோக்களை தேர்வு செய்து, கல்வி தொலைக்காட்சிக்கு அனுப்புகின்றனர். 

இதன் வாயிலாக மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது இது நிச்சயம் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மாணவர்களுக்கு உண்டான நிகழ்ச்சி நிரல்களின் தொகுப்புக்கான அட்டவணையை இதற்கு முன்பு வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.