வருகிற திங்கட்கிழமை 13/07/2020 முதல் பாடப்புத்தகங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

வருகிற திங்கட்கிழமை (13/07/2020) முதல் பாடப்புத்தகங்கள் 


அனைத்து அரசு, அரசுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அனைவருக்குமான வழிகாட்டுதல்கள்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு:


10ஆம் வகுப்பு படிக்கப்போகும் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் உதவியுடன் Whatsapp group  மூலம் தகவல் அளித்து பாடப்புத்தகம் 13/07/2020 முதல் 17/07/2020 வரை பெற்று செல்லுமாறு அறிவுத்தவேண்டும்

வருகிற திங்கட்கிழமை (13/07/2020) முதல் பாடப்புத்தகங்கள் வகுப்பு ஆசிரியர் மற்றும் உடன் 2 ஆசிரியர்கள் உதவியுடன் கையுறையை அணிந்து தனித்தனியாக(5 புத்தகங்கள்) கட்டி வைக்கப்பட்டு தனி மனித இடைவெளியுடன் மாணவர்களுக்கு வழங்கவேண்டும்

இவற்றிற்கு தனி பதிவேடு பதிவு செய்து அனைத்து மாணவர்களும் வாங்கி விட்டனரா? என உறுதி செய்யவேண்டும்


பள்ளியை கிரிமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்

மாணவர்களை கல்வி தொலைக்காட்சி (10ஆம் வகுப்பு)பார்க்க அறிவுத்தவேண்டும் மற்றும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வருமாறுமாறு அறிவுறுத்தவேண்டும்

உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்


மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு:

வருகிற சனிக்கிழமை (11/07/2020) மதியம் முதல் அனைத்து (HIGHTECH LAB) உயர்தொழிட்நுட்ப கணினி ஆய்வகம் ON செய்து இருக்கவேண்டும்

வருகிற திங்கட்கிழமை (13/07/2020) மற்றும் செவ்வாய் (14/07/2020)கணினி  ஆசிரியர் மற்றும் உடன் 2 ஆசிரியர்கள் உதவியுடன் தங்களுக்கு வழங்கும் USERNAME PASSWORD  பயன்படுத்தி 12 வகுப்பு பாடங்களை  DOWNLOAD செய்யவேண்டும்

இதில் ஏதேனும் குறை இருந்தால் HIGH TECH LAB DISTRICT COORDINATOR அனுகவும்

12ஆம் வகுப்பு படிக்கப்போகும் மாணவர்களிடம் தங்களிடம் உள்ள கணினியை FULL CHARGE நிலையில் பெயர் மற்றும் GROUP CODE எழுதி ஒட்டி வைத்து கொண்டுவருமாறு வகுப்பாசிரியர் உதவியுடன் Whatsapp group  மூலம் தகவல் அளித்து பாடப்புத்தகங்கள் மற்றும் LESSON VIDEO DOWNLOAD (DIGITAL LESSON) செய்து  15/07/2020 முதல் 17/07/2020 வரை பெற்று செல்லுமாறு அறிவுத்தவேண்டும்


முதலில் FIRST GROUP( MATHS/SCIENCE) மாணவர்களை வரவழைத்து பிறகு ஏனைய மாணவர்களை வரவழைக்கவேண்டும்

இவற்றிற்கு தனி பதிவேடு பதிவு செய்து அனைத்து பாடங்களும் DOWNLOAD ஆகிவிட்டதா என உறுதி செய்யவேண்டும்

24/03/2020 அன்று தேர்வு எழுதாத 12ஆம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக  HALL TICKET DOWNLOAD செய்து 13/07/2020 முதல் 17/07/2020 வரை பெற்று செல்லுமாறு அறிவுத்தவேண்டும்

17/07/2020 அன்று மாலை 5.00 மணியளவில் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை DGE/DSE  அளிக்கவேண்டும் மற்றும் தினமும் மாலை ஹால் டிக்கெட் பெற்ற மாணவர் விவரத்தினை DGE/DSE  அளிக்கவேண்டும்

தனித்தேர்வரை தனித்தேர்வு மையத்தில் பெற்று செல்லுமாறு அறிவுத்தவேண்டும்

இறுதியாக எத்தனை தேர்வு மையம் தேவை என உறுதிசெய்ய வேண்டும்

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.