12 வகுப்பு தேர்வு முடிவுகள் முதலமைச்சர் ஆலோசனையின் படி வெளியாகும்.

12 வகுப்பு தேர்வு முடிவுகள்

 முதலமைச்சர் ஆலோசனையின் படி வெளியாகும்.

12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் பழனிசாமியின் ஆலோசனையின் படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறினார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 
மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும்.
ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். 
முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனதை்து துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். 

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதே நிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் பிரச்சனைகள் உள்ளதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வரின் ஆலோசனைப் படி 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடபடும் எனவும் தெரிவித்தார்.

பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழக்கப்பட்டு வருவதாகவும், புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா பிரச்சனைகள் தீர்ந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

1 Comments

*Kalvi Imayam Is Not Responsible For The Comments Here
*Kalvi Imayam Has The Rights To Remove / Delete Your Comments