Important instructions to All HMs and 10th and 11th students

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

Important instructions to All HMs
 and 10th and 11th students 
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - இரத்து செய்யப்பட்டது பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் - அறிவுரை வழங்குதல் சார்பு பார்வை: அரசாணை (நிலை) எண்.54, பள்ளிக்கல்வி (அதே) துறை, நாள்.09.06.2020.

பார்வையில் காணும் அரசாணையில், 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம்



வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிகான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது என்று மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமையாசிரிர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
For More Details Click here

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

பொருள் :

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு மிருந்து விருப்பக்கடிதம் பெறுதல் - தொடர்பாக

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் களும்

தங்கள் மாவட்டத்திலுள்ள

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது



மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று

24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

பாடங்களுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

பாடங்களுக்கான மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக்கடிதத்தினை (Willing Letter) 24.06.2020 தேதிக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்

அக்கடிதத்தில் மாணவரது பெயர், தேர்வெண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்

26.06.2020 தேதிக்குள்
இவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வெண் வாரியாக அடுக்கி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
நகல்
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்
For More Details Click here

Top Sheet Model Click here
format 1 sslc clickere
format 3 - hse 1st year arrears click here
format - hse 1st year click here



  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.