கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்

கல்லூரிகளுக்கான தேர்வுகள் 
நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் 

கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு அனைவர்களும் தேர்வுகளில் தேர்ச்சி செய்யப்படுவார் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளுக்கும் முடிவெடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் போன்றவை பல இடங்களில் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்படுகின்றன. இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு தான் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க முடியும். 
கிருமி நாசினி தெளிக்கும் இயந் திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று தரும புரி ஆட்சியர் அலுவலக வளாகத் தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத் தார். 
அதேநேரம், மாணவர் களின் எதிர்காலத்துக்கு தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியமானது. கல்லூரி தேர்வுகள் என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.
தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசு கல்லூரி தேர்வுகள் குறித்து முடிவுகளை இறுதி செய்யும்
இவ்வாறு கூறினார்.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments