பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடு விவரம் சேகரிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடு விவரம் சேகரிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப் பெண் பட்டியல் தயாரிக்க வருகை பதிவேட்டை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கும், ஒரு பாடல் தேர்வு ரத்து செய்யப்பட் டுள்ளது. மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கை

அனைத்து பள்ளிகளும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின்வருகை பதிவை, மார்ச், 21 வரை முழுமையாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்
பின்னர், அந்த வருகைப் பதிவேட்டை, ஒவ்வொரு பிரிவு வாரியாக கட்டி மாவட்ட கல்வி அலுவ லர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவற்றை மாவட்ட கல்வி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப் பட்டுள்ளது.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments