மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: விதிகளில் அதிரடி திருத்தம்! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம்?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: விதிகளில் அதிரடி திருத்தம்! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம்?

Census 2027 New Rules: Centre Amends Rules to Deploy Private School Teachers for Census Duty

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள்: விதிகளில் திருத்தம்


மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்த விதிகள் 2026-ன் படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முழு விவரம் இதோ!

The Ministry of Home Affairs has notified the Census (Amendment) Rules 2026. Teachers from government, aided, and unaided private schools can now be appointed as enumerators. Read the key changes.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவது தொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990-இல் மத்திய அரசு வெள்ளிக்கிழமை திருத்தம் மேற்கொண்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவது தொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990-இல் மத்திய அரசு வெள்ளிக்கிழமை திருத்தம் மேற்கொண்டது.

அதன்படி அரசு உதவிபெறும் அல்லது அரசு உதவிபெறாத தனியாா் அமைப்புகளைச் சோ்ந்த ஆசிரியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களாக நியமிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அரசாணையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மற்றும் பதிவாளா் ஜெனரல் மிருத்யுஞ்ஜய்குமாா் நாராயண் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதில், ‘அரசு, உள்ளூா் அமைப்புகள், அரசு உதவிபெறும் அல்லது அரசு உதவிபெறாத தனியாா் அமைப்புகள், சமூகங்கள் அல்லது அறக்கட்டளைகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூா் அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த உதவியாளா்கள் அல்லது பிற அதிகாரிகள், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தகுதியானவா்கள் என மாநில அல்லது யூனியன் பிரதேச நிா்வாகம் கருதுபவா்களை நியமிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம், அலாகாபாத் உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

தோ்தல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு அரசு உதவிபெறும் அல்லது அரசு உதவிபெறாத பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், ஊழியா்களை ஈடுபடுத்தக் கூடாது என மும்பை உயா்நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் பிற வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 33 வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூகப் பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். அதனுடன், முதல் முறையாக மக்களின் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளன.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.