Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.சேதுராம
வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தற்காலிக
தெரிவு பட்டியல்களுக்கு காத்திருப்போர் பட்டியல் கடந்த பிப்.11-ம் தேதி
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in)
வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பணியில் சேராத மற்றும் பணியில் சேர்ந்த பிறகு ராஜினாமா
செய்த ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டன. அவர்கள் தொடர்புடைய அதே இன
சுழற்சியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அந்த இடத்துக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியல் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையால் நியமன ஆணை
வழங்கப்படும்.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.