Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
10th Tamil பாடலைப்படித்து விடையளித்தல்
10.ஆம் வகுப்பு - தமிழ் பாடலைப்படித்து விடையளித்தல்
10.ஆம் வகுப்பு - தமிழ் பாடலைப்படித்து விடையளித்தல்
1. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. தென்னன் மகளே எனக் குறிப்பிடப்படுவது
அ) பாண்டியன் ஆ) தமிழ் இ) கடல் ஈ) தொல்காப்பியம்
2. பாப்பத்து என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண் கீழ்க்கணக்கு ஈ) சிற்றிலக்கியங்கள்
3. பாடலில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்க
அ) தென்னன் – மகளே
ஆ) தென்னன் – இன்னறும்
இ) முன்னும் –நினைவால் ஈ) மன்னும் – சிலம்பே
4 நற்கணக்கு – இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) வேற்றுமைத்தொகை
இ) பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
2. "உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
1. பாடலின் ஆசிரியர்-
அ) பாரதியார்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ)
பாரதிதாசன் ஈ) தமிழழகனார்
2. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.
அ) செந்தாமரை ஆ) வீசுதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
3. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ) உந்தி இ) யாண்டும் ஈ) வண்டு
4. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -
அ) உலகியல் நூறு ஆ) பாவியக் கொத்து இ) கனிச்சாறு ஈ) எண்சுவை
3. செந்தமிழே! உள்ளுயிரே செப்பரியநின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
1. பாடல் இடம்பெற்ற நூல் –
அ) கனிச்சாறு ஆ)
காசிக்காண்டம் இ) பரிபாடல் ஈ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
2. பாடலின் ஆசிரியர்
அ) பாவலரேறு ஆ) சீவலமாறன் இ) குமரகுருபரர் ஈ) கீரந்தையார்
3. நின்பெருமை – இலக்கணக்குறிப்பு
அ) ஆறாம் வேற்றுமைத்தொகை ஆ) ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
4. ”வேறார்” எனும் சொல் பின்வருபவருள் யாருக்குப் பொருந்தும்?
அ) ஔவையார் ஆ) கம்பர்
இ) வீரமாமுனிவர் இ) இளங்கோவடிகள்
4. "உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"
1. பாடலின் ஆசிரியர் -
அ) கண்ணதாசன் ஆ) பாரதிதாசன் இ) வண்ணதாசன் ஈ) பாரதியார்
2. கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ) வண்டு ஆ) காற்று இ) அன்னம் ஈ) மழை
3. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க?
அ) தருவேன், தட்டுவேன் ஆ) உண்டா,
வண்டா இ) இல்லா, இல்லம் ஈ) சொல்லா, சொல்லிட
4. பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயர்---
அ) ஞானம் ஆ) காலக்கணிதம் இ) பூத்தொடுத்தல் ஈ) சித்தாளு
5. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
1. பாடல் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு
இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து
2. பாடலை இயற்றியவர்-
அ) கீரந்தையார் ஆ) குலசேகராழ்வார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ)
பெருங்கெளசிகனார்
3. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) கரு வளர் - உரு அறிவாரா ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில் – கருவளர் ஈ. விசும்பில் – வானத்து
4. விசும்பு என்ற சொல்லின் பொருள்-
அ) மழை ஆ) காற்று இ) வானம் ஈ) நீர்
6. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1. பாடல் இடம்பெற்ற நூல் –
அ) கனிச்சாறு ஆ) காசிக்காண்டம் இ) பரிபாடல் ஈ) முல்லைப்பாட்டு
2. பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப்பெயர்
அ) ஆறு ஆ) ஐந்து இ) ஏழு
ஈ) ஒன்பது
3) செப்பல் - இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை
ஆ) தொழிற்பெயர் இ)
பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
4) பாடலில் இடம்பெற்ற மோனையைத் தேர்ந்தெடுக்க
அ) விருந்தின – திருந்து ஆ) எழுதல் – பொருந்து
இ) பொருந்து – பரிந்து ஈ)
ஒழுக்கம் - வழிபடு
7. செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞாணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி
சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி
பதிந்தாடக்
கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக்
கதிர்த் தொடுமாட
வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக
செங்கீரை
1. பாடல் இடம்பெற்ற நூல்: –
அ) கனிச்சாறு ஆ) காசிக்காண்டம் இ) பரிபாடல்
ஈ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
2. பாடலின் ஆசிரியர்
அ) பாவலரேறு ஆ) சீவலமாறன்
இ) குமரகுருபரர் ஈ) கீரந்தையார்
3. குண்டல மும் குழை காதும் – இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
4. குகன் என்பது யாரைக்குறித்தது?
அ) குழந்தை ஆ) முருகப்பெருமான் இ) ஆசிரியர் இ) பக்தர்
8 "ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."
1. பாடல் இடம் பெற்ற நூல்-
அ) பெரியபுராணம்
ஆ) திருவிளையாடற்புராணம் இ) கந்தபுராணம் ஈ) பரிபாடல்
2. பாடலின் ஆசிரியர்
அ) பரஞ்சோதி முனிவர் ஆ) கம்பர் இ) சேக்கிழார் ஈ) குலசேகராழ்வார்
3. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.
அ) ஓங்கு – பனை ஆ) நீங்குவம் –அல்லோம்
இ) ஓங்கு - நீங்குவம் ஈ) நீத்து - நீயும்
4. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.
அ) ஆலவனம் ஆ) இடும்பவனம் இ) முல்லை வனம் ஈ) கடம்பவனம்
9. ஆழ நெடுந்திரைஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமைஎன்றவர் சொல்லிய சொல்லொரு சொல்அன்றோ
ஏழமைவேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ
1. பாடலின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர் ஆ) தமிழழகனார்
இ) கம்பர் ஈ) இளங்கோவடிகள்
2. ”ஏழமை வேடன்” இத்தொடர் யாரைக்குறித்தது?
அ) இராமன் ஆ) இலக்குவன் இ) குகன் ஈ. கோவலன்
3. எதுகையைத் தேர்ந்தெடுக்க.
அ) ஆழ - நெடுந்திரை ஆ) வேழ- நெடும்படை
இ) ஆழ - வேழ ஈ) ஏழமை - வேடன்
4. திரை - பொருளைத் தேர்க.
அ) துணி ஆ) ஆறு இ) அலை ஈ) கடல்
10. வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ்
சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
1. பாடல் இடம்பெற்றுள்ள நூலைத் தேர்க
அ) கம்பராமாயணம் ஆ) சிலப்பதிகாரம் இ
காசிக்காண்டம் ஈ) தேம்பாவணி
2. பாடலின் ஆசிரியர்
அ) கம்பர் ஆ) வீரமாமுனிவர் இ) சீத்தவைச் சாத்தனார்
ஈ) இளங்கோவடிகள்
3. சீர் எதுகைசொல்லைத் தேர்க
அ) வண்ணமும் – இருக்கையும் ஆ) பூவும்-புகையும்
இ) வண்ணமும்-சுண்ணமும் ஈ) பட்டினும்-
நூலினும்
4. காருகர் இச்சொல்லின் பொருளைத் தேர்க
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ)
உமணர்
5. சுண்ணம் – இச்சொல்லின் பொருளைத் தேர்க
அ) பவளம் ஆ) நறுமணப்பொடி இ) செல்லம் ஈ)
பட்டு
11. காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.
1. பாடல் இடம்பெற்ற நூல்
அ) பரிபாடல்
ஆ) முத்தொள்ளாயிரம் இ)
சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
2. கொல் யானை – இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
3. ”கிள்ளி” என்பது யாரைக்குறிக்கும்?
அ) சேர மன்னன் ஆ) சோழ மன்னன் இ) பாண்டிய மன்னன் ஈ) பல்லவ மன்னன்
4. பாடலில் இடம்பெற்ற சீர் மோனையைத் தேர்ந்தெடுக்க
அ) நாவலோ – நல்யானை
ஆ) நாவலோ – நாளோதை
இ) கொல்யானை – நல்யானை ஈ) காவல் – உழவர்
12. நந்தின் இளஞ்சினையும் புன்னைக்
குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நனைமுத்த வெண்குடையான் நாடு
1. பாடல் இடம்பெற்றுள்ள நூலைத்தேர்க
அ) முத்தொள்ளாயிரம் ஆ) சிலப்பதிகாரம் இ)
காசிக்காண்டம் ஈ) தேம்பாவணி
2. பாடலின் ஆசிரியர்
அ) கம்பர் ஆ) வீரமாமுனிவர்
இ) அறியப்படவில்லை ஈ) இளங்கோவடிகள்
3. அடி எதுகையைத் தேர்க
அ) இளஞ்சினையும் – குவிமொட்டும் ஆ) பந்தர் – சிந்தி
இ) திகழ்முத்தம்-நகைமுத்த
ஈ) நந்தின் பந்தர்
4. கமுகு -இச்சொல்லின் பொருளைத் தேர்க.
அ) முத்து ஆ) பாக்கு இ) சங்கு
ஈ)சேறு
5. பாடலில் இடம்பெற்றுள்ள அணியைத் தேர்க
அ) தற்குறிப்பேற்ற அணி ஆ) வஞ்சப்புகழ்ச்சி அணி இ) உருவக அணி
ஈ) உவமையணி
6. பாடலில் உள்ள வினைத்தொகை, பண்புத்தொகைச் சொற்களைத் தேர்க
அ) திகழ்முத்தம், குவிமொட்டு ஆ) இளங்கமுகு, பாளை
இ) குவிமொட்டு, இளங்கமுகு ஈ)
பந்தர், போர் ஏறி
13. பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்"
1. பாடலின் ஆசிரியர் -
அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ)
அழகிரிசாமி ஈ) அசோகமித்திரன்
2. பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) தேம்பாவணி இ) இரட்சண்ய
யாத்திரிகம் ஈ) சீறாப்புராணம்
3. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய
இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை,
பரப்பி
4. சேக்கை என்ற சொல்லின் பொருள்
அ) உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ)
இளம்பயிர்


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.