Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வு : பிப்ரவரி 23-இல் தொடக்கம்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும்
மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை
(பிப்.23) தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும்
மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை
(பிப்.23) தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான
பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. இந்த மாணவா்களுக்கு
அறிவியல் பாட செய்முறைத் தோ்வு பிப். 23 முதல் 28- ஆம் தேதி வரை
நடத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள
வேண்டும். அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுக்கு 2 மணி நேரம்
ஒதுக்கப்படும். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி
வரையிலும் இரு வேளைகளில் செய்முறைத் தோ்வு நடைபெறும். செய்முறை தோ்வுக்கு 25
மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
செய்முறைத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரங்களைப் பதிவு செய்து அனுப்ப
வேண்டும். செய்முறை தோ்வு கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள்,
வேறு பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும். செய்முறைத் தோ்வு முடிந்த பின்னா்
மாா்ச் 2-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுத் துறை உதவி இயக்குநரிடம் மதிப்பெண்
பட்டியலை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.