TET தேர்வு முடிவுகள், New GO Ms No.23 பின்பற்றி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

TET தேர்வு முடிவுகள், நேற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை (G.O.Ms.No.23, School Education (TRB) Department, Dated: 28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!




ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவிக்கை எண்: 03A/2025
நாள்: 29.01.2026
ADDENDUM
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025 நாள்:11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-I 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.
28.01.2026 அன்று வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்(TRB)துறை, அரசாணை (நிலை) எண்.23-இல், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Category Maximum Marks Minimum Marks (%) to be obtained in TNTET
Paper-I
General 150 60% or 90 Marks
BC, BC(M), MBC/ DNC, PWD 150 50% or 75 Marks
SC, SC(A), ST 150 40% or 60 Marks
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, 11.08.2025 நாளிட்ட அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகளுக்கு அறிவிக்கையின் வரிசை எண்.5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி பின்பற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.
தலைவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.