Half Yearly Exam Date 2025 - அரையாண்டுத் தேர்வு டிச.10-ல் தொடக்கம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

அரையாண்டுத் தேர்வு டிச.10-ல் தொடக்கம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

6th - 12th Half Yearly Exam Time Table 2025

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.