Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து செய்தி வெளியீடு!
2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர்
நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி 1
உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் /
உடற்கல்வி ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர் , இடைநிலை ஆசிரியர் /
காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு 12.06.2025 மற்றும்
13.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது . பணியிட
மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொது மாறுதல்
கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறுதெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.