10th Tamil 1st Mid Term Important Questions

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10th Tamil 1st Mid Term Important Questions 2025

10th Standard Tamil 1st Mid Term Important Questions for Unit 1, 2, 3 New Text Books. 10th Tamil Important குறுவினா Important 2 Mark Questions book back question and answer. 

10th Tamil 1st Mid Term Important Questions

Unit 1

குறுவினா

1. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!

முன்னும் தினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

4. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே”


குறுவினா                                                                                                                                                                                                                

1. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

  • ( குவியல், குலை,மந்தை,கட்டு )


2. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

  • 1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
  • 2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.


3. எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

  • அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை  
  • ஆ. எறும்புந்தன் கையால் எண் சாண்
  • இ. ஐந்து சால்பு ஊன்றிய தூண் ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி


4. கலைச்சொல் அறிவோம்

  • 1. Vowel  2. Consonant  3. Homograph  4. Monolingual


Unit 2

குறுவினா

1. நமக்கு உயிர் காற்று

காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

4. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.           

குறுவினா

1. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க

  • அ) இயற்கை – செயற்கை  ஆ) கொடு - கோடு

2. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

  • 1. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்
  • 2. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

3. தொடர் வகைகளை எழுதுக.

  • அ. பழகப் பழகப் பாலும் புளிக்கும் 
  • ஆ. வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் -

4. கலைச்சொல் அறிவோம்

  • 1. STORM  2. LAND BREEZE  3. TORNADO 4. TEMPEST


Unit 3

குறுவினா

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

2. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

3. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

4. “எப்பொருள்” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.


குறுவினா

1. பழமொழியை நிறைவு செய்க.

  • அ. உப்பில்லாப்--- ஆ. விருந்தும்---- இ. ஒரு பானை---  ஈ. உப்பிட்டவரை-----


2. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

  • 1. சிலை - சீலை   2. விடு - வீடு


3. தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

  • 1. அன்புச்செல்வன், திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
  • 2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.


4. கலைச்சொல் அறிவோம்

  • 1. Hospitality  2. Wealth 3. Baby shower  4. House warming

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.