Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Science Exam Important Tips 10 ஆம் வகுப்பு மாணவர்களே!! இந்த பாடங்களை மட்டும் படிச்ச கன்ஃபார்மா ஃபுல் மார்க்...
10th Science Exam - பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறுவதற்கும், மெல்ல கற்கும்
மாணவர்கள் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி அடைவதற்குமான, சில எளிய குறிப்புகளை
மாணவர்களுக்கு வழங்குகிறார், புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்.
அறிவியல் பாடத்தில் பொதுவாக மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டுமென்றால்
பாடத்தின் பின்பக்கம் இருக்கும் வினாக்களோடு சேர்த்து, ஒரு ஒரு பாடத்தின்
உள்ளிருக்கும் "உனக்கு தெரியுமா", "மேலும் அறிந்து கொள்வோம்" போன்றவற்றில் உள்ளதை
குறித்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டும்.
18 மற்றும் 22 ஆகிய வினாக்களுக்கு தீர்வு காண்பது போன்ற கணக்கீடுகளை மாணவர்கள்
தெளிவாக படித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு
நூறு பெறுவதற்கு மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தரவாக படித்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை தேர்ச்சி அடைவது என்பது மிகவும் எளிதான விஷயம்.
அதாவது 20 மதிப்பெண்கள் பெற்றாலே அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட
முடியும். மெல்ல கற்கும் மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினா, சில எளிமையான கணக்குகள்,
கடைசி 4 பாடத்தில் உள்ள வினாக்களில் அனைத்துமே ஈசியாக தான் இருக்கும். அதில்
ஒன்றை எழுதினாலும், படம் பார்த்து பதில் எழுதுதல், படம் வரைதல் போன்றவற்றை சரியாக
எழுதினாலும் எளிதில் தேர்ச்சி அடைய முடியும்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல்
என்று பிரிவுகளின் அடிப்படையில் பாடங்கள் இருக்கும். அதனை மாணவர்கள் தினமும் ஒரு
பிரிவு என்ற அடிப்படையில் படித்தால் எளிதாக தேர்ச்சி அடைய முடியும் என்கிறார்
ஆசிரியர்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.