குழந்தைகள் தின உறுதிமொழி - 14.11.2024

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

குழந்தைகள் தின உறுதிமொழி - 14.11.2024

குழந்தைகள் தின உறுதிமொழி - 14.11.2024


நான் பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.

 குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம் . இளம்வயது கர்ப்பம் , பாலியல் வன்முறை , பள்ளி இடைநின்றல் , போதைப்பொருள் பயன்பாடு , குழந்தைத் தொழிலாளர் , சமூக ஊடகங்கள் தாக்கம் , பாலின வேறுபாடு . மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன் . 

சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன் , பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிசெய்வேன்.

 மாற்றுதிறன்கொண்ட குழந்தைகளுக்கும் , மனவளர்ச்சி குன்றிய , ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறிதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்திக்கொடுப்பேன்.

 குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098 , 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன் . 

நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது , நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன் . 

குழந்தைநேய சமூகத்தை இணைந்து உறுவாக்குவோம் , உறுதிசெய்வோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.