School Morning Prayer Activities - 02.01.2024

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

School Morning Prayer Activities - 02.01.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2024

School Morning Prayer Activitiesதிருக்குறள் 
  • அறத்துப்பால்
  • இயல்:துறவறவியல்
  • அதிகாரம் : கொல்லாமை

குறள்:327

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம்:

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.


பழமொழி :

Lamp at home and a lion at chase
பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி

இரண்டொழுக்க பண்புகள் :

1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           

2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.

பொன்மொழி :

ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’

-மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)

பொது அறிவு :

  • 1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது? செங்காந்தள்
  • 2. தமிழ்நாட்டின் மாநில மரம் எது? பனை மரம்

English words & meanings :

Accentuate-make more noticeable or prominent. வலியுறுத்து. Axle- a rod or spindle (either fixed or rotating) passing through the centre of a wheel or group of wheels. அச்சு.

ஆரோக்ய வாழ்வு : 

சிறுகீரை பயன்கள் : நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானம் எளிதாகி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. வைட்டமின் A, B, C, மற்றும் இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் இந்த சிறுகீரையில் நிரம்பி கிடக்கின்றன.


நீதிக்கதை

புறா சொல்லும் பாடம்

சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன


வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய்  இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.


இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நான்கு மூலையிலும்  குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.


அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. ” இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன; அதனால் நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,


” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும் நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.


அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  என்று கதறத் தொடங்கின.அப்போது தலைவர் எல்லோரையும் அமைதிப்படுத்தியது. மேலும்


” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நான்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதி எல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது. சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான். ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயிலலை இதாவது கிடைத்ததே என்று வலையின் நான்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல் தலைமைப்புறா பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது. வேடன் வலியில்



” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.


பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வலை இருந்தது. வலையுடன் புறாக்கள் இறங்கிதைப் பார்த்த எலி உள்ளே ஓடி பதுங்கியது.


தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று கூறியது.  வெளிவந்த எலி , ” நண்பனான  உனக்கு ஆபத்தென்றால் காப்பாற்றலாம்;  என் சிறிய பற்களால் கடித்து எல்லாரையும் விடுவிக்க முடியாது” என்றது.


“நம் நட்புக்காக இவர்களை நீ காப்பாற்றியே ஆகவேண்டும் ” என்றது புறா.


நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.


விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.


அன்புக் குழந்தைகளே, இக்கதை மூலம் நாம் பெறும் படிப்பினை:


உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை.


அனுபவமிக்க வீட்டில் உள்ள பெரியவர் அறிவுரையைக் கேட்கவேண்டும்


ஒற்றுமையே பலமாகும்; அதுவே வெற்றி தரும்.


துன்பநேரத்தில் நண்பனைக் காக்க வேண்டும்.


சிறியவர்களும் சில நேரங்களில் பெரிய உதவியைச் செய்வார்கள்.


இன்றைய செய்திகள் - 02.01.2024

*கவிஞர் வைரமுத்துவின்

 "மகா கவிதை" நூல் முதலமைச்சர் 

மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

*ஜப்பானைத் தொடர்ந்து தென்கொரியா, ரஷ்யாவிலும் நிலநடுக்கம் மற்றும் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.


*ஜம்மு-காஷ்மீர்- ஸ்ரீ நகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.


* திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் நெல் வரத்து குறைந்துள்ளதால் தற்போது தமிழகம் முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு.


* புரோ கபடி லீக்:  ஒரு புள்ளியில் வெற்றியை நழுவ விட்ட தமிழ் தலைவாஸ். 9வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது ஏழாவது தோல்வி.

Today's Headlines


*Poet Vairamuthu's

 "Maha Kavithai" book was 

Published by Chief Minister M. K.Stalin.


*After Japan, South Korea, Russia also received an earthquake warning and a tsunami warning for the eastern coast of North Korea.


*Jammu-Kashmir- Sri Nagar's Lal Chowk had an unprecedented New Year celebration.


* Due to reduced supply of paddy in cultivation centers in Trichy district, the price of rice has suddenly increased across Tamil Nadu.


* Pro Kabaddi League: Tamil Thalaivas miss out on victory by one point. This is the seventh defeat for Tamil Thalaivas who played in the 9th league.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.