Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அரையாண்டு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு...?
தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தேதி தள்ளிவைப்பு
தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிச .13 - ஆம் தேதி முதல் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் , புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை ( 11.12.2023 ) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை ( 13.12.2023 ) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன . பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.