School Morning Prayer Activities 06.10.2023

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

School Morning Prayer Activities 06.10.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.2023

School Morning Prayer Activities
School Morning Prayer Activities 31.07.2023

திருக்குறள் : 

  • அதிகாரம்: கேள்வி. 
  • குறள் : 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

பழமொழி :

  • Diligence is the mother of good fortune
  • முயற்சி திருவினையாக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

  • 1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
  • 2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

பொன்மொழி :

நேற்றைய தோல்விகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும். மகாத்மா காந்தி 


பொது அறிவு :

1. ஈராக் நாட்டின் தலைநகரம் எது? விடை: பாக்தாக்
2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்? விடை: பெங்களூர்

English words & meanings :

  • plank - மரப்பலகை, battle plane - பெரிய போர் விமானம்

ஆரோக்ய வாழ்வு : 

ரோஜா: பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும், வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7  நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.


அக்டோபர் 6 இன்று

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  

புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.


நீதிக்கதை


 கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.



அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.



குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.



அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான். “குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.


இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்


இன்றைய செய்திகள் - 06.10.2023

நிபா வைரஸ் புதிதாக யாருக்கும் பரவவில்லை : நிபா தொற்று பாதித்த பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உலோக மாசுகள் அதிகரிப்பு - சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்.

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை: 3000 சுற்றுலா பயணிகள் தவிப்பு.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக சோலார் மின் உற்பத்தி பொருத்த முடிவு.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 : வில்வித்தை ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா.


Today's Headlines

Nipah virus has not spread newly to anyone : Restrictions imposed in areas affected by Nipah infection have been lifted.

Increasing metal pollution in Sembarambakkam Lake - Information from IIT Chennai study.

102 missing in floods in Sikkim: 3000 tourists stranded.

Decided to install additional solar power generation in Chennai metro stations.

Asian Games 2023: India wom gold in men's archery.

Asian Games 2023: India won gold in squash event

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.