Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று (22.06.2023) பிற்பகல் வெளியீடு!
ஏப்ரல் -2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 22.06.2023 ( வியாழக்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று ' SSLC APRIL 2023 RETOTAL RESULTS ' என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் , தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.