Republic Day Speech in Tamil 2023

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை | Republic Day Speech in Tamil Essay

Republic Day Speech in Tamil 2023


குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா தனது 74-வது குடியரசு தின விழா கொண்டாட உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். 

இந்நாளில் பள்ளிகள், அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குடியரசு தின உரை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அல்லது பிற நிறுவனங்களில் காணக்கூடிய பொதுவான விஷயங்கள் ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அன்றைய நாளில் குடியரசு தினத்தின் சிறப்புகளை பற்றி பேசுவார்கள். அதற்கான தலைப்புகளை தேடுவதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதனை பற்றி கீழே காணலாம்.

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை | Republic Day Speech in Tamil Essay

குடியரசு தினம் என்பது அனைத்து இந்தியர்களும் ஒன்று கூடி, நமது நாட்டை சிறந்ததாக மாற்றும் நோக்கத்தோடு இணைந்து கொண்டாட வேண்டிய நேரம்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் போராட்டங்களை நினைவு கூர்வதற்கும், சிறந்த, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இது ஒரு நேரம்.

இந்த பதிவில் மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியரசு தின பேச்சு போட்டி கட்டுரை(kudiyarasu dhinam katturai in tamil) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியரசு என்றால் என்ன?

இந்தியா 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 26 ஆம் நாள் தனது 74 ஆவது குடியரசு நாளை (Republic Day) கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் நாம் குடியரசு என்றால் என்ன என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். குடியரசு என்பதன் பொருள், மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி தான் மக்களாட்சி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.

குடியரசு என்பது மக்களே தங்களுக்கான அரசாங்கத்தையும் அதனுடைய சட்ட திட்டங்களையும் உரிமைகளையும், கடமைகளையும், நாட்டை கட்டமைத்து முன்னேற்றுவதற்கு உண்டான அனைத்து வழிகளையும், அனைத்து மக்களுக்கான சமூக நீதியையும் வழி வகுப்பது தான் ஆகும்.

குடியரசு தின வரலாறு

குடியரசு தினம் கொண்டாடுவதற்கான காரணம் | Why we Celebrate Republic Day in Tamil

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26 ஆம் ஆண்டு கன்ஸ்டிட்யூன்ட் அசெம்பிளி ஆப் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  மேலும் இது இந்திய அரசு சட்டம் 1935-இல்  இருந்து பின்பற்றப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட ஒரு குடியரசு உருவாவதற்காக வழிவகை செய்தது.

ஜனவரி 26, 1950 இன் முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு என்பது இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் வரையறுக்கிறது. மேலும் இது குடிமக்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் கொண்ட ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் (த கான்ஸ்டிடியூசன் ஆப் இந்தியா) இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கான சமத்துவத்தையும், பேச்சுரிமையும், தனி  மனித சுதந்திரத்தையும்ம், பத்திரிகை சுதந்திரத்தையும் உத்திரவாதம் செய்கிறது. மதம், ஜாதி, அல்லது ஆண், பெண் போன்ற எதனையும் பொருட்படுத்தாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு  கீழே அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாக மாறியது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

2. குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்  சிறப்பு

குடியரசு தின கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான அணிவகுப்பு புது தில்லியின் ராஜ்பாத்தில் நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பில் உலகெங்கிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார மற்றும் இராணுவ வலிமையை பறைசாற்றுவதற்கான  காட்சிகள் நடைபெறும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சார குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்குபெறும். அணிவகுப்புக்கு முன் இந்தியக் குடியரசுத் தலைவர் “நாட்டு மக்களுக்கு உரை” நிகழ்த்துவார். அணிவகுப்பைத் தொடர்ந்து கொடியேற்றம், 21 துப்பாக்கி முழக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குடியரசு தினக் கொண்டாட்டம் ஜனநாயகம் மற்றும் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை நினைவூட்டுகிறது. இது இந்திய அரசியலமைப்பை மதிக்கும் மற்றும் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் நாளாகும்.

3. இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசமைப்பு சட்டத்தை எளிதாக விளங்குவதற்காக நாம் அதை மூன்று பிரிவின் கீழ் கொண்டு வரலாம். அதாவது அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு, குடிமக்களின் உரிமைகள் கடமைகள், சமத்துவம் மற்றும் சுதந்திரம். இந்த மூன்று தலைப்புகளைப் பற்றி கீழே சுருக்கமாக பார்ப்பதன் மூலம் நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பற்றி ஒரு புரிதலுக்கு வரலாம்.

அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு

இந்திய நாட்டின் அரசாங்க அமைப்பு என்பது ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசாங்கத்திற்கான கட்டமைப்பு மற்றும் செயல்பாடு அதன் கடமைகள் மற்றும் உரிமைகளை வரையறை செய்கிறது.

குடிமக்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்

இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய குடியரசு அமைப்பு சட்டத்தை மதித்து நடப்பது அவர்களது கடமையாகும்.

மேலும் இந்திய அரசியலமைப்பு இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் மதம், ஜாதி, பாலின பேதம்இன்றி  சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

இந்திய குடிமக்களுக்கு ஆறு அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பு பின்வருமாறு உத்தரவாதம் அளிக்கிறது.

  • சமத்துவத்திற்கான உரிமை
  • சுதந்திரத்திற்கான உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • மத சுதந்திரத்திற்கான உரிமை
  • கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள்
  • அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை
சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான முக்கியத்துவம்

மக்களாட்சி மற்றும் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் கொள்கைகளை முன்வைக்கும் ஒரு முக்கியமான ஆவணமே இந்திய அரசியலமைப்பு ஆவணம் ஆகும்

4. கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயகக் குடியரசு

ரிபப்ளிக் ஆப் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு ஆகும். இது கீழ்காணும் தலைப்புகளில் அரசின் கொள்கைகளையும், கட்டமைப்புகளையும், அரசாங்கத்தின் தலைவர்களின் பங்குகளையும், மாநிலங்களின் பிரிவுகளைப் பற்றியும் கூறுகிறது.

அரசாங்கக் கட்டமைப்பின் விளக்கம்

கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு என்பது ஒரு மத்திய அரசு ஒன்றிய அரசு மற்றும் மாநில , யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாகும்.

இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்கு

இந்திய குடியரசு தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்திய பிரதமர் நேரடியாக மக்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற்றவரே பிரதமராகிறார். இந்திய குடியரசு தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். இவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

இந்தியா 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி நாடாகும். மாநிலங்கள் மேலும் மாவட்டங்களாகவும், சிறிய நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

5. பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியம்

இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளை பேசுபவர்கள் ஆகவும், பல்வேறு கலாச்சாரங்களை உடையவர்களாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் வாழ்பவர்கள். இந்திய நாடு என்பது பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்க அமைப்பாகும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய விளக்கம்

இந்தியாவில் பல்வேறு மொழிகள் மாதங்கள் மற்றும் கலாரச்சாரங்கள் உள்ளடக்கிய ஒரு தொன்மையான நாடாகும்.  தேசிய மொழி என்று இந்தியாவிற்கு கிடையாது.

அதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22  பிராந்திய மொழிகளை அட்டவணை படுத்துகிறது. மாநிலங்கள் தங்களுக்கான அலுவலக மொழிகளை தாங்களே சட்டம் ஏற்றி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்தியப் பண்பாட்டு மரபு பற்றிய விவாதம்

இலக்கியம், கலை, இசை மற்றும் உணவு உள்ளிட்ட வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இந்தியா பெயர் பெற்றது.

கணிதம், அறிவியல் மற்றும் மருத்துவத்தில் இந்தியாவின் பங்களிப்புகள்

கணிதம் அறிவியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

6. முடிவுரை

இந்தியக் குடியரசின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம்

இந்திய குடியரசு ஒரு நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாற்றை கொண்டுள்ளது. இந்த திருநாட்டின் மதிப்புகளையும் கொள்கைகளையும் நிலை நிறுத்துவது குடிமக்களாகிய நமது கடமையாகும்.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குடிமக்களின் பங்கு

உலகிற்கு முன்மாதிரியாக இருக்கும் வலுவான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியா அதன் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு உண்மையாக

இருப்பதை உறுதி செய்வது எதிர்கால குடிமக்களின் பொறுப்பு.
இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம் பங்கை மேற்கொள்ளுவதும், அதன் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதையும் உறுதி செய்வதும் நமது பொறுப்பாகும்.

மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சார இனங்களையும், மொழிகளையும் நாம் மதிப்பதும், சகோதரத்துவத்துடன் இருப்பதும் நமது முக்கிய பொறுப்பாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.