Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Tamil Important 2 Marks
10th Standard Tamil Samachar Kalvi important questions for 2 Marks Questions and Answers. Class 10 Tamil Two mark questions for Half Yearly Exam, Full Portion Test, Revision test, Public Exam questions.
10th Tamil important 2 marks question. Q.No 16 to 21 & 22 to 28. பகுதி 2, பிரிவு 1&2.
- 1. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
- அ) செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் ஆகும்.
- ஆ) வானத்துத் தேவர்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் எனப்படும்.
- 2. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் - உவமை உணர்த்தும் கருத்து யாது?
- 3. கரப்பிடும்பை இல்லார் -இத்தொடரின் பொருள் கூறுக.
- 4. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு இத்தொடரை இரு - தொடர்களாக்குக.
- 5. இறடிப் பொம்மல் பெறுகுவீர் - இத்தொடர் உணர்த்தும் பொருளைஎழுதுக.
- 6. "விடல்" என முடியும் குறளை எழுதுக.
- 7. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க
- அ) தலைவாழை இலையால் விருந்தினருக்கு உணவளிப்பது தமிழர் மரபு.
- ஆ) குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளுள் ஒன்று கபடி.
- 8. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
- 9. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
- 10. உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் எழுந்திராய் காலதூதர் கையிலே "உறங்குவாய் உறங்குவாய்"
- கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
- 11. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுது.
- 12. "குன்றேறி” எனத் தொடங்கும் குறளை எழுதுக.
- 13. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
- அ) கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்று அழைக்கலாம்.
- ஆ) கு.ப.ராவின் படைப்புகளில் ஒன்று அகலிகை.
- 14. இறடிப் பொம்மல் பெறுகுவீர் -தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
- 15. பாசவர்,வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
- 16. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
- 17. வருங்காலத்தில் தேவையென கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவிய கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடு.
- 18. "விடல்” என முடியும் குறளை எழுதுக
- 19. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
- அ) இடைவிடாத சமூக அறப்பணியை ஞானம் என்பர்.
- ஆ) வீரமாமுனிவர் சதுரகராதி எனும் நூலை இயற்றினார்.
- 20. மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே - இவ்வடியில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- 21. "வாழ்வில் தலைக்கனம்” “தலைக்கனமே வாழ்வு” என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
- 22. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
- மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
- 23 "எப்பொருள்"எனத் தொடங்கும் குறளை எழுதுக.
- 24. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
- அ)உண்மையானசெல்வம் என்பதுபிறர் துன்பம் தீர்ப்பது.
- ஆ)தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
- 25. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களை எழுதுக.
- 26. இறடிப் பொம்மல் பெறுகுவீர் - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
- 27. இலா என்னும் மென்பொருள் குறித்து எழுதுக
- 28. மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?
- 29. "செயற்கை”எனத் தொடங்கும் குறளை எழுதுக.
- 30. தொகைச் சொற்களை வகைப்படுத்துக.
- 31. அன்புச் செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.
- 32. கலைச்சொல்லாக்கம் தருக:
- i) Symbolism
- ii) Artifacts
- 33. சொல்லில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க : முத்துப்பல்.
- 34. பின்வரும் தொடரைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க: கொஞ்சம் அதிகம்.
- 35. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக?
- 36. "நின்று"- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- 37. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
- அ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
- ஆ) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
- 38. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
- அ) மலை - மாலை
- 39. மரபு பிழைகளை நீக்கி எழுதுக.
- ஆ) வளி - வாளி
- அ) கரும்புத் தோப்புக்குள் சென்றேன். ஆ) மயில் கூவும், குதிரை கத்தும்.
- 40. கலைச் சொல் தருக : Aesthetics, Myth.
- 41. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
- அ) "காமராசர் நகர் எங்கே இருக்கிறது"? ஆ) "இந்த வழியாகச் செல்லுங்கள்”
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.