School Morning Prayer Activities 25.08.2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

School Morning Prayer Activities 25.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.08.2022

திருக்குறள் :

  • பால்:பொருட்பால்
  • இயல்:குடியியல்
  • அதிகாரம்: உழவு
  • குறள் : 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்:

ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்

பழமொழி :

  • All happening is for the best.
  • நடப்பவை எல்லாம் பெரும் நன்மைக்கே.

இரண்டொழுக்க பண்புகள் :

  • 1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
  • 2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

  • அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று...

பொது அறிவு :

  • ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் யார்?. Ans:  பி.டி உஷா.
  • 2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? Ans:  ஞானபீட விருது.

English words & meanings :

  • yar·mul·ke - A skullcap worn by Jewish men and boys. Also called kippah. பெயர்ச் சொல். யூத ஆண்களும் சிறுவர்களும் தலையில் அணியும் தொப்பி 

ஆரோக்ய வாழ்வு :

பப்பாளி இலை

  • 1. நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.
  • 2.டெங்கு காய்ச்சலுக்கு இதன் இலைச்சாற்றை குடித்து விரைவாக குணம்பெறலாம்.

NMMS Q 48:

  • Objection' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் மூலம் உருவாக்க இயலாத வார்த்தை எது? a) Object. b) Caution c) Net. விடை: Caution

ஆகஸ்ட்  25 இன்று 

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்

School Morning Prayer Activities
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். 

1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்


நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்


இன்றைய செய்திகள் - 25.08.22

* தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

* நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், இன்று நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* காலணி உற்பத்தியில் முன்னணி இடத்தில்உள்ள தமிழகத்தில், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியில் மேலும் ரூ.20 ஆயிரம்கோடி முதலீடு மற்றும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி.

* மிகச் சிறப்பான பணிக்காக பிரிட்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ் இடம் பிடித்துள்ளது.

* ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்திலேயே பெரிய அளவிலான வியாழன் கோளை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

* வெப்ப அலை எதிரொலி: வரலாறு காணாத வறட்சியால் சீனா தவிப்பு.

* உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனை முன்னேற்றம்.

* சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.

* இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

* The High Court has imposed an interim stay on the increase in electricity tariff until the post of legal member is filled in the Tamil Nadu Electricity Regulatory Commission.

* Tamil Nadu Higher Education Minister Ponmudi has said that since the results of NEET are not yet available and the date of the consultation is to be fixed based on the result, the consultation for the general category which was to be held today has been postponed.

* In Tamil Nadu, which is a leader in footwear production, a new policy has been released to invest Rs. 20 thousand crores in footwear and leather products and create 2 lakh jobs.

*  Indigenously Designed Short Range Missile Test Success

* Mizoram Police has been named in the British Book of World Records for Outstanding Performance.

* The James Webb Telescope has imaged the largest planet in the Solar System, Jupiter.

* Heat wave reverberations: China grapples with record drought. 

* Badminton World Championships: Japan advances to 3rd round

*The ticket price for the International Women's Tennis Tournament in Chennai has been released.

* It has been announced that the Football Federation of India will hold executive elections on 2nd.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.