முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன்பிறகு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வு எழுத முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.