Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம்
அறிமுகக் கூட்டம் திருப்பத்தூர்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு நலவாரியம்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை
வேலையில்லாத பட்டதாரி ஆசிரி யர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும் என மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேலை யில்லா பட்டதாரி ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரி யர் சங்கம் சார்பில் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் நடந்தது. மாநிலத்தலைவர் மாயதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உமாமகேஸ்வரி முன் னிலை வகித்தார். சையத் அமீன் உசைனி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் கூடுதல் இயக்குநர் ரத்தினநடராஜன் பங்கேற்றார்.
கூட்டத்தில் அனைத்து அரசு பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் நலவாரியம் அமைத்து தர வேண்டும். அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 ஆக குறைக்க வேண்டும். படித்துவிட்டு வேலையில்லா மல் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு பணி வழங்க வேண்டும். 50 சதவீதம் பேருக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.