9th Tamil PAGUPATH URUPPUELLAKKANAM

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

9th Tamil PAGUPATH URUPPUELLAKKANAM

9th Tamil PAGUPATH URUPPUELLAKKANAM. TN 9th Standard Tamil Pagupaths Uruppuellakkanam All Unit Answers. 9th All Subject Important Questions and Study Materials. ஒன்பதாம் வகுப்பு  பகுபத உறுப்பிலக்கணம்.

இயல் 1

1. வளர்ப்பாய் =  வளர் + ப் + ப் +ஆய்

  • வளர் -  பகுதி
  • ப் -  சந்தி
  • ப் - எதிர்கால இடைநிலை
  • ஆய் -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

2 . கொள்வார் = கொள் + வ் + ஆர்

  • கொள் - பகுதி
  • வ் -  எதிர்கால இடைநிலை
  • ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

3.  உணர்ந்த = உணர் +த் ( ந் ) + த் + அ

  • உணர் - பகுதி
  • த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 
  • த் -  இறந்தகால இடைநிலை
  • அ -  பெயரெச்ச விகுதி

4. வந்தனன் = வா (வ) + த் ( ந் )+ த் + ஆன் + அன்

  • வா - பகுதி  ' வ ' ஆனது விகாரம்
  • த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 
  • த் -  இறந்தகால இடைநிலை
  • அன் -  சாரியை
  • அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி

5. செய்யாதே = செய் + ய் + ஆ + த் + ஏ

  • செய் - பகுதி
  • ய் - சந்தி
  • ஆ -  எதிர்மறை இடைநிலை
  • த் -  எழுத்துப்பேறு
  • ஏ -  முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

இயல் 2

6.விரித்த - விரி + த் + த் + அ

  • விரி - பகுதி
  • த்  - சந்த
  • த் -  இறந்தகால இடைநிலை
  • அ -  பெயரெச்ச விகுதி

7.  குமைந்தனை  -   குமை +த்(ந் )+ த் + அன்

  • குமை - பகுதி
  • த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
  • த் -  இறந்தகால இடைநிலை , அன் - சாரியை
  • ஐ -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

8.  பாய்வன - பாய் + வ் +அன் +அ

  • பாய் - பகுதி
  • வ் -  எதிர்கால இடைநிலை
  • அன் -  சாரியை
  • அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி

9.  நிறுத்தல் -  நிறு +த் + தல்

  • நிறு - பகுதி
  • த் - சந்தி
  • தல் - தொழிற்பெயர் விகுதி

10. கொடுத்தோர் -  கொடு + த் + த் + ஓர்

  • கொடு - பகுதி
  • த் - சந்தி
  • த் -  இறந்தகால இடைநிலை
  • ஓர் -   பலர்பால் வினைமுற்று விகுதி


இயல் 3

11. பரப்புமின் - பரப்பு + மின்

  • பரப்பு - பகுதி
  • மின் -  முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி

12. அறைந்தனன் - அறை + த் ( ந் )+ த் + அன் + அன்

  • அறை - பகுதி
  • த் - சந்தி - ' ந் ' ஆனது விகாரம்
  • த் -  இறந்தகால இடைநிலை
  • அன் - சாரியை
  • அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி

இயல் 4

13. பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

  • பொருத்து - பகுதி
  • உம் - முன்னிலை பன்மை விகுதி
  • கள் -  விகுதி மேல் விகுதி

14 . நெறிப்படுத்தினர் -  நெறிப்படுத்து + இன் + அர்

  • நெறிப்படுத்து - பகுதி
  • இன் -  இறந்தகால இடைநிலை
  • அவர்-  பலர்பால் வினைமுற்று விகுதி

இயல்  5

15. விளைவது - விளை + வ் + அ + து

  •  விளை - பகுதி
  •  வ் -  எதிர்கால இடைநிலை
  •  அ -  சாரியை
  •  து -  தொழிற்பெயர் விகுதி

16. சமைக்கின்றார் -  சமை + க் + கின்று + ஆர்

  • சமை - பகுதி
  • க் -  சந்தி
  • கின்று -  நிகழ்கால இடைநிலை
  • ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

17 .உரையாமை -  உரை+ ய் + ஆ + மை

  • உரை - பகுதி
  • ய் - சிந்தி ( உடம்படுமெய் )
  • ஆ -  எதிர்கால இடைநிலை
  • மை -  தொழிற்பெயர் விகுதி

18.  காய்க்கும் - காய் + க் + க் + உம்

  • காய் - பகுதி
  • க் -  சந்தி
  • க் - எதிர்கால இடைநிலை
  • உம் - பெயரெச்ச விகுதி

இயல்  - 6


19.பருகிய - பருகு +இன் + ய் + அ

  • பருகு - பகுதி
  • இன் -- இறந்தகால இடைநிலை -  'ன் '  கெட்டது விகாரம்
  • அ -  பெயரெச்ச பகுதி

20 . பூக்கும் - பூ + க் + க் + உம்

  • பூ - பகுதி
  • க் -  சந்தி
  • க் -  எதிர்கால இடைநிலை
  • உம் -  வினைமுற்று விகுதி

21. தொட்டு - தொடு( தொட்டு ) +  உ

  • தொடு - பகுதி,  ' தொட்டு ' என இரட்டித்து  இறந்தகாலம் காட்டியது -                                                             விகாரம்
  • உ -  வினையெச்ச விகுதி

22 . கண்டேன் -  காண் + (கண் ) + ட் + ஏன்

  • காண் - பகுதி ,  ' கண் ' எனக் குறுகியது விகாரம்
  • ட் -  இறந்தகால இடைநிலை
  • ஏன் -  தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

 இயல் 7

23 .இறைஞ்சி -  இறைஞ்சு + இ

  • இறைஞ்சு -  பகுதி
  • இ -  வினையெச்ச விகுதி

24 . ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்

  • ஓம்பு - பகுதி
  • வ் -  எதிர்கால இடைநிலை
  • ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

25 . கொண்ட - கொள் (ண்) + ட் +அ

  • கொள் - பகுதி ' ண் ' ஆனது  விகாரம்
  • ட் -  இறந்தகால இடைநிலை
  • அ -  பெயரெச்ச விகுதி

26 . ஆழ்ந்த -  ஆழ் + த் ( ந் ) + த் + அ

  •  ஆழ் - பகுதி
  • த் - சந்தி ' ந் ' ஆனது  விகாரம்
  • த் -  இறந்தகால இடைநிலை
  • அ -  பெயரெச்ச விகுதி

27 .ஓங்கிய -  ஓங்கு +இ (ன் )+ ய் + அ

  • ஓங்கு - பகுதி
  • இ (ன் ) -  இறந்தகால இடைநிலை
  • ய் -  உடம்படுமெய்
  • அ -  பெயரெச்ச விகுதி

28 . மகிழ்ந்தோர் - மகிழ் +த்(ந்) +த் +ஓர்

  • மகிழ் - பகுதி
  •  த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்
  • த் -  இறந்தகால இடைநிலை
  • ஓர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

இயல் 8

29. வேண்டி - வேண்டு + இ

  • வேண்டு - பகுதி
  • இ -  வினையெச்ச விகுதி

30 . போகிறது - போ + கிறு + அ + து

  • போ - பகுதி
  • கிறு -  நிகழ்கால இடைநிலை
  • அ -  சாரியை
  • து -  ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

31 . மலர்ச்சி - மலர் + ச் + சி

  • மலர் - பகுதி
  • ச் -  பெயர் இடைநிலை
  • சி -  தொழிற்பெயர் விகுதி

32 . இணைகின்றன - இணை + கின்று + அன் + அ

  • இணை - பகுதி
  • கின்று - நிகழ்கால இடைநிலை
  • அன் -  சாரியை
  • அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி

33 . போக்குக - போக்கு + க

  •  போக்கு -  பகுதி
  • க -  வியங்கோள் வினைமுற்று விகுதி

இயல் 9

34 . சரிந்து - சரி + த் ( ந் ) + த் + உ

  • சரி - பகுதி
  • த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • உ -   வினையெச்ச விகுதி

35 . உடையார் - உடை + ய் + அர்

  • உடை - பகுதி
  • ய் -  சந்தி (  உடம்படுமெய் )
  • அர் -  பலர்பால் வினைமுற்று விகுதி 

36 . பொளிக்கும் - பொளி + க் +க் +உம்

  • பொளி -  பகுதி
  • க் -  சந்தி
  • க் -  எதிர்கால இடைநிலை
  • உம் -  வினைமுற்று விகுதி

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. பூக்கும் காய்க்கும் இரண்டிலும் உம் என்பது ஒன்று பெயரெச்சம் என்றும் மற்றொன்று வினையெச்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது ஏன் விளக்கம் வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.