Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Tamil Refresher Course Test 1
12th Tamil Refresher Course Test 1. 12th Standard Tamil Refresher Course One Word Test 1. TN 12th Tamil Refresher Course Online Test 1, One Word Test 1. 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒரு மதிப்பெண் தேர்வு - 1 வினா & விடை. 12TH TAMIL PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM ONE WORD TEST - 1. மேல்நிலை இரண்டாம் ஆண்டு.
- Class: 12
- Subject: Tamil - பொதுத்தமிழ்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- இயங்கலைத்தேர்வு - 1 - ஒரு மதிப்பெண்
- Topic: பகுபத உறுப்புகள் , இலக்கணக்குறிப்பு , புணர்ச்சி விதிகள் , திணை , துறை வினாக்களும் விடைகளும்.
1. விகுதி பெறாத கட்டளை அல்லது ஏவல் வினையே ------
அ) இடைநிலைஆ) பகுதி
இ) சந்தி
ஈ) சாரியை
விடை : ஆ ) பகுதி
2. திணை , பால் , எண் , இடம் ஆகியனவற்றைக் காட்டுவது -----
அ) பகுதிஆ) இடைநிலை
இ) விகுதி
ஈ) விகாரம்
விடை : இ ) விகுதி
3. வேர்ச்சொல் , முதனிலை என அழைக்கப்பெறுவது ------
அ ) விகுதிஆ) பகுதி
இ ) சாரியை
ஈ) இடைநிலை
விடை : ஆ ) பகுதி
4. இடைநிலை -------வகைப்படும்.
அ) 6ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை : இ ) 4
5. வருவான் என்பதில் 'வ்' என்பது ------இடைநிலை
அ) இறந்தகாலஆ) நிகழ்கால
இ) எதிர்கால
ஈ ) எதிர்மறை
விடை : இ ) எதிர்கால
6. எழுத்து தனித்தும் , தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம். அது பகுபதம், பகாப்பதம் என இருபாலாகி இயலும் எனக்குறிப்பிடுவது -----
அ) நன்னூல்ஆ) தொல்காப்பியம்
இ ) தொன்னூல் விளக்கம்
ஈ) இலக்கண விளக்கம்
விடை : அ ) நன்னூல்
7. கீழ்க்காண்பனவற்றுள் உடம்படு மெய்களாவன ------
அ) க்,ச்ஆ)த் .ப்
இ) ய், வ்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : இ ) ய் , வ்
8. பொருள் அற்றது -------
அ) பகுதிஆ) விகுதி
இ) சாரியை
ஈ) விகாரம்
விடை : இ ) சாரியை
9. ' நின்றான் ' என்பதில் ' நில்' என்பது -------விகாரம்.
அ) திரிதல்ஆ) கெடுதல்
இ) குறில் நெடிலாக மாறிய
ஈ) நெடில் குறிலாக மாறிய
விடை : அ ) திரிதல்
10. எழுத்துப்பேறாக வரும் எழுத்து ------
அ) ப்ஆ) ம்
இ) ய்
ஈ )த்
விடை : ஈ ) த்
11. இரண்டு ----- சொற்கள் ஒட்டி வருவதுஇருபெயரொட்டுப் பண்புத்தொகை
அ) வினைஆ) பெயர்
இ) இடை
ஈ) உரி
விடை : ஆ ) பெயர்
12 ) காலம் கரந்த பெயரெச்சம் ------
அ) பண்புத்தொகைஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : ஆ ) வினைத்தொகை
13. போல , போன்ற என்னும் உவம உருபு மறைந்து வருவது ------
அ) உவமைத்தொகைஆ) பண்புத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) வினையாலனையும் பெயர்
விடை : அ ) உவமைத்தொகை
14. சேரனும் சோழனும் - என்பதன் இலக்கணக்குறிப்பு -----
அ) உவமைத்தொகைஆ) பண்புத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) எண்ணும்மை
விடை : ஈ ) எண்ணும்மை
15.) ' உயிர்முதல் ' என்பதன் சான்று -----
அ) மணிமாலைஆ) வாழை இலை
இ) தமிழ் நிலம்
ஈ) பொன்வண்டு
விடை : ஆ ) வாழை இலை
16. ' வாயொலி' - எவ்வகைப் புணர்ச்சி விதி என்பதைச் சுட்டுக.
அ) ஈறுபோதல்ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
விடை : ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
17. பொருள் பாகுபாட்டின் அடிப்படையில் திணை - வகைப்படும்.
அ) 2ஆ)6
இ ) 4
ஈ) 3
விடை : அ ) 2
18.' தொல்காப்பியம்' குறிப்பிடும் திணைகள் ( புறம்சார்ந்தவை) -----
அ) 11ஆ) 5
இ) 7
ஈ ) 12
விடை : இ ) 7
19. புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங்கொள்ளலர்; அயர்விலர் - எனும் புறப்பாட்டு சுட்டும் திணை --
அ) வெட்சித்திணைஆ) கைக்கிளை
இ) பொதுவியல்
ஈ) பாடாண்திணை
விடை : இ ) பொதுவியல் திணை
20. அரசன் செய்யவேண்டியகடமைகளை முறை தவறாமல்செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துதல் துறை -----
அ) செவியறிவுறூஉத்துறைஆ)பொருண்மொழிக்காஞ்சி
இ) பரிசல்துறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : அ ) செவியறிவுறூஉத்துறை
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.