Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Basic Quiz for All Subject
10th Standard All Subject Basic Quiz | Online Test | 10th Saturday Basic Quiz.
10th Standard State Board Syllabus Basic Quiz for All
Saturday. 10th Basic Quiz for all Subjects Tamil Medium and English
Medium. 10th Free Online Test, 10th New Syllabus, 9th - 12th Refresher Course Module Books & Answer key.
SCERT அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz - ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்-சார்பு
10th Basic Quiz for all Subjects | 10th All Subject Free Online Test
பொருள்:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு Basic Quiz - ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்-சார்பு.
பார்வை
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரை நாள் : 09.09.2021
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை
மேம்படுத்தவும், கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும்,
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18.09.2021
முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் Hi Tech lab மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம்,
அறிவியல். சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல்
விளைவுகளின் அடிப்படையில், Basic Quiz நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஒரு Reading comprehension சார்ந்து 5 பலவுள்
தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு
வினாக்களும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு
பாடத்திலிருந்து 10 பலவுள் தெரிவு வினாக்களும் Basic Quiz - ல்
கேட்கப்படும்.
அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த Basic Quiz. 18.09.2021 அன்று காலை 9 மணி முதல்
மாலை 5 மணிக்குள் Hi Tech lab-ல் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு
குழுவினருக்கும், மாணவர் EMIS Log in மற்றும் password ஆகியவற்றை பயன்படுத்தி 1
மணி 30 நிமிடம் கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும். மேலும் இச் செயல்பாட்டினை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் என
அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குழு மாணவர்களும் Basic Quiz முடித்தபின்
உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத 18.09.2021 அன்று மாலை 5.00
மணிக்குள் முடிக்க உரிய அட்டவணையை தலைமை ஆசிரியர்கள் தயாரித்து செயல்பட உரிய
அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி
அலுவலர்கள் வழங்கவேண்டும். இச்செயல்பாட்டினை சனிக்கிழமையன்று முடிக்க இயலாத
நிலையில் அடுத்து வரும் செவ்வாய்கிழமையன்றும் நடத்தி முடிக்குமாறு அனைத்து அரசுப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஆசிரியர்கள் பிற இணைய வசதியுள்ள கணினிகளைப் பயன்படுத்தியும் இந்த Basic
Quiz சிறப்பாக நடத்தி முடிக்க உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்களுக்கு வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வு முடிந்தவுடன் அடுத்த பள்ளி வேலை நாளில் நடந்து
முடிந்த Basic Quiz-க்கான வினா விடைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பி
வைத்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் Basic Quiz-க்கான விடைகளை மாணவர்களிடம்
கலந்துரையாட வேண்டும் என அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.