நீட் தேர்வு முடிவில்  குளறுபடி


நீட் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதேபோல் ஜேஇஇ தேர்வுகளும் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டதுகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வுவை தள்ளிவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.ஆனால் நீட் தேவுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வை 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், தற்போது நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் நீட் தேர்வு முடிவுகளை www.ntaneet.nic.in என்ற பக்கத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.


இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கபட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இணையதளத்திலிருந்து நீட் தேர்வு நுழைவுத் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கபட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post