தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

தமிழகத்தில் தற்போது 

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் தற்போது பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. முழுமையாக கல்விக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதிவரை சேர்க்கை நடக்கும்.


இதுவரை 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். 15 இடங்களில் தொடக்கப்பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும். மாவட்ட மற்றும் ஊர்புற நூலகங்களில் காலிப் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்" என்றார்.
ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments