இந்த ஆண்டு மட்டும் பருவத் தேர்வுகளுக்கு விளக்கு

வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கு, இந்த பருவத்துக்கான தேர்வு மட்டும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், தற்போதுள்ள சூழலில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இளங்கலை முதலாம், 2ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும், பலவகை தொழில் நுட்பப் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments