மாணவர்கள் இலவச பொருட்களை பெறுவது எப்படி?

மாணவர்கள் இலவச பொருட்களை பெறுவது எப்படி?

சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 42 இலட்சத்து 61 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத காரணத்தால் சத்துணவு திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் மாணவர்கள் பலனடைவதற்காக, மே மாதத்திற்கான சத்துணவு உலர்பொருட்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 16 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசியும், 5200 டன் பருப்பும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3.100 கிலோ அரிசி மற்றும் 1.200 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதுபோல 6 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 4.650 கிலோ அரிசி மற்றும் 1.250 கிலோ பருப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த உலர் உணவு பொருட்களை பெறுவதற்காக சத்துணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மற்றும் அடையாள அட்டையுடன் தாங்கள் கல்வி பயிலும் பள்ளிக்கு செல்லவேண்டும்.
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments