Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அரசு பள்ளியின் மீது திடீர் மோகம்
பெற்றோர்களுக்கு மறைமுக அழுத்தம்
இந்த ஆண்டு பள்ளிகள் எப்போது திறக்கும் என்று ஒரு முடிவுக்கு வராத நிலையில் கொரோனா காலகட்டத்தில், கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையிலும், சில தனியார் பள்ளி நிறுவனங்கள் கல்விக் கட்டணம் செலுத்தக்கோரி பெற்றோர்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்துவந்தன. இந்நிலையில், நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையடுத்து, கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி' நேரடியாகவே பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன தனியார் பள்ளிகள். பலதரப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது வருமானம் இல்லாத இந்த சூழலில் பல தனியார் பள்ளிகள் `கொரோனா காலகட்டத்தில், வருமானமின்றி வாடிக்கிடக்கும் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கேட்டு தனியார் பள்ளி நிறுவனங்கள் துன்புறுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
40 சதவிகிதம் கல்விக் கட்டணம்
இந்த உத்தரவை எதிர்த்துத் தனியார் பள்ளிகள், நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில்தான், ``40 சதவிகிதம் கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்" என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல தனியார் பள்ளிகள் முழுமையான கட்டணத்தையும் வசூலித்து ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் முழுமையான கட்டணத்தை பெற்றோர்களிடம் வசூலிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர், அரசு பள்ளிகளுக்குப் படையெடுத்துவரும் தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி'யின் தலைமை ஆசிரியை லட்சுமியிடம் பேசியபோது, '`சமூகத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்போரின் குழந்தைகள்தான் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். எனவே, தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டுவருவது போன்ற ஆன்லைன் வகுப்புகள், அரசு பள்ளிகளில் சாத்தியம் இல்லாதது. இதனால், `தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் படிக்கிறார்களே... ஆனால், நமக்கு இன்னும் பள்ளியே திறக்கப்படவில்லையே' என்ற மனக்குறை - தாழ்வு மனப்பான்மை நம் குழந்தைகளிடையே வந்துவிடக் கூடாது. மேலும், பல மாதங்களாக தொடர்ந்து விடுமுறையிலேயே இருந்துவரும் குழந்தைகள் தங்கள் படிப்பு ஆர்வத்தில் பின் தங்கிவிடவும் கூடாது.
இந்த காலகட்டத்திலும் கூட பல தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதன் காரணமாக மக்களிடையே அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தனது பிள்ளைகளை சேர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் அரசு பள்ளியின் மீது மாணவர்களை சேர்ப்பதற்கான மோகம் தற்போது பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
****************************************************
Free Online Test Click Here
Check Your 10th 11th 12th Result 2020 Click Here
↓↓↓All Important Study Material Collections↓↓↓
All New TN Text Book 2020 Click Here
12th STD Click Here
11th STD Click Here
10th STD Click Here
****************************************************
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.