கரோனா பரவும் அபாயம் உள்ளதால் 10, 11, 12 தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி பொதுநல மனு

கரோனா பரவும் அபாயம் உள்ளதால்
 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி பொதுநல மனு • நாளுக்கு நாள் பல நாள் வைரஸ் பரவும் அச்சம் உள்ளதால் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தள்ளி வைப்பதற்கான பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
 • பத்தாம் வகுப்பு ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். ஒட்டு மொத்தமாக பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை உள்ளதால் சமூக இடைவெளியை பின் பற்றாத நிலை ஏற்படும் மாணவர்களிடையே பரவும் தொற்று அதிகரிக்கும் என்பதால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். 
 • இந்நிலையில் அரசுத் தரப்பிடம் இருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பேருந்து வசதிகள் ஏற்படுத்தினாலும் கிராமப்புற மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிடும் அனைத்து மாணவர்களும் பத்திரமாக தங்கள் தேர்வை எழுத முடியும் என்பது கேள்விக்குறியான ஒன்றாக கருதப்படுகிறது. 
 • மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்சி தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தமிழக அரசு ஜூன் ஒன்றாம் தேதியே நடத்துவதற்கான அவசியம் என்ன என்று பல்வேறு தரப்பினர் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளன.


 • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடத்தப்படுவதால் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 • எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை அறிவித்து அதன் விளைவாக நோய் மிக விரைவாகப் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிடும். 
 • நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக பரவும் இந்த சூழலில் பொதுத்தேர்வு வைப்பதும் அவசியம் என்ன என்று பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்துள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் நிலையில் தமிழகத்தின் பொதுத் தேர்வுகள் ஜூன் மாதமே நடத்தப்படுவதன் அவசியம் என்ன?


தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி

 • தேர்வு மையத்துக்கு மாணவர் களை அழைத்து வரவும், தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 • தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக ளும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான  மாணவர்க ளுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரி வித்திருந்தார். இந்த நிலையில் மாணவர்களைத் தேர்வு மையத்துக்கு அழைத்து வர பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்று அவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
 • இது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சுட்டு ரைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
 • தேர்வு மையத்துக்கு வருகிற மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந் தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதி களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • மாணவர்கள் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகை யில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்பட்டிருக்கி றது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர் வுக்கு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அதில் செங் கோட்டையன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments